Friday, 4 October 2024

ஆசிரியர் கூரிய கதை

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக………....ஏதோ சொன்னார் ,

இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த தந்தை வளர்த்து வந்தார்.

அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் .

ஆனா சில நேரங்கள்ல அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் எந்த முடிவுக்கும் வந்துடக்கூடாது.'

நாம ஹோட்டலுக்குப்போனால் , ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.
முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நாம அவுங்களுடைய மனசிலே இருக்கம்னு அர்த்தம்'.
பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் "அவங்க கூடத்தான் பல நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்" னு.

வாழ்க்கை குறுகியது,

ஆனால் அழகானது…

வாழ்வோம்….

மகிழ்வோம் …..

படித்ததில் பிடித்தது.

நன்றி : google.

Wednesday, 7 December 2022

பாடம்

_மனைவி இறக்கும்போது,_ _*அவருக்கு வயது 45 இருக்கும்*._ _உறவினர்கள், *நண்பர்கள்*_ _அனைவரும் *அவரை மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை*_

_என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள்._ _*அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான்_ *_திளைத்திருப்பது_* _எனக்கு போதும்._ _*அவனுக்காக வாழ போகிறேன்*_

_இன்னொரு துணை_
*_எனக்கு தேவையில்லை_* _என்று சொல்லிவிட்டார்._

_வருடங்கள் உருண்டோடியது._
_மகன் வளர்ந்து_
_பெரியவனானதும்,_
_தன் வீட்டையும்,_
_வியாபாரத்தையும்_ 
_மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்._

_மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,_
_அவர்களுடனேயே தங்கியும் விட்டார்._

_ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்_ 
_சீக்கிரமாக காலை_ _உணவு உண்ண,_
_*மருமகளிடம்* ரொட்டியில் தடவ_ _*வெண்ணெய்*_ _தருமாறு கேட்டார்._
_*மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்*_

_மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன்_ _வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்._

_*மகன்* உணவருந்தும் போது, *மேஜையில் வெண்ணை* கொண்டு வந்து வைத்தாள் *மனைவி*. ஒன்றும் பேசாமல் , *மகன்* தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். *அந்த வெண்ணையை* பற்றிய சிந்தனையே *அந்நாள் முழுதும்* அவன் எண்ணத்தில் *ஓடிக்கொண்டு இருந்தது*._

_மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க..._

_நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்._

_இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்._
_மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.._

_ஏன் இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா *உங்கள் மதிப்பு* என்னவென்று *என் மனைவிக்கு* உணர்த்த வேண்டிய *கட்டாயம் வந்துவிட்டது*._

_*சாதாரண வெண்ணைக்காக* நீங்கள் கையேந்தும் *நிலை வரக்கூடாது*_
_ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை *அவள் உணர வேண்டும்*. மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்..._

_பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.._ 

_ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்._

_பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை._

                  படித்ததில் பிடித்தது.......💐💐💐

Thursday, 1 December 2022

பெரிய பிரச்சினை சின்ன தீர்வு

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான்.

" டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "

டாக்டரு சொன்னாரு..

"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!" 

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். 
எவ்வளவு பீஸு?"

" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "

" ஓ அப்டீங்களா? சரிங்க 
டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி, 
அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."

" ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? "

" நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

" என்ன தம்பி சொல்றீங்க? 
வெவரமா சொல்லுங்க! "

" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "😄

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.👻

Wednesday, 29 December 2021

கடவுள்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். 

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். 

இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். 

சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். 

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? 

எவ்வளவு போராட்டம்?  

எவ்வளவு இழிசொல்? 

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? 

என்று தன் விதியை நொந்துகொண்டான். 

மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். 

குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். 

"என்னப்பா...சாப்பிட்டாயா?" 

என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். 

கேட்பது ராஜா என்று தெரியாமல் 

"ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. 

என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 

'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். 

இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 

'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 

'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். 

சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார். 

'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 

'ஏனப்பா அழுகிறாய்?' 

என்று ராஜா கேட்க.

 "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...

இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...

கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். 

நல்லதே நடக்கும்.

சும்மாவா சொன்னார்கள் :: 

கோபுர தரிசனம் கோடி புண்னியம் என்று.

சிவ ஓம் நமசிவாய 

அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள்.

Tuesday, 26 April 2011

நான் தூசல்ல தூயவலே....

உன் விழிகளில் கவிழ்ந்தேன்....
கை நீட்டினாய்....
எனைத் தூக்கிவிடதானோ
என்றிருந்தேன்....
நீ கசக்கினாய்
தூசென எனைநினைத்து
துடைத்துவிட எண்ணினாயோ....?
நான் தூசல்ல தூயவலே....
உந்தன் விழிகளில்
பிறக்கும் ஒளிநான்தான்.....

அவள் பெயர்கவிதை....

நான்.....

இமைக்காமல் ரசிக்க
ராகத்தில்
ஜனித்த
லட்சனமான
சுழலச்செய்யும்
மிருகம் நீ....

இரவுநேர
ராகத்திலென்
ஜன்னல்திரந்த
லட்சலட்ச
சுகந்தம்
மிவள்....

இயற்கையின்
ராஜியத்தில்
ஜனனம்தந்த
லச்சுமியின்
சுந்தர
மிச்சமிவள்....

இயல்பான
ராவினில்
ஜக்கமாவென
லட்சியத்தோடு
சுற்றிவரும்
மிருதங்கசப்தமிவள்..

இன்றைக்கும்
ராசாத்தி உன்
ஜகத்தினில்
லட்டுதின்னும்
சுட்டியென்
மிட்டாய் நீ.....

இன்னும்
ராட்டினத்தில்
ஜனமாய் நான்
லட்சம்முறை
சுற்றி
மிதக்கும் தொட்டில் நீ....

இன்னுமொரு
ராமனாய்
ஜகத்புருஷனாய்
லட்சியம்வலுவா
சுந்தரன் நான்
மிகையற்ற சீதை நீ.....

இரண்டொருநொடிபிரளா
ராட்சநினைவுகொண்ட
லட்சாதிபதி
சுடரவனானேன்....
மிச்சப்பொழுதுகளில் கோடீஸ்வரி நீ....

இலையிட்டு படைக்கப்பட்ட
ராத்திரி விருந்து நீ....
ஜன்னலோடு கதவடைத்து
லட்டாக உன் பெண்மை
சுவைக்கிறேன்
மிச்சமில்லாமல்......